68 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று திறக்கப்பட்ட சலூன் கடைகள்

சென்னையில் சுமார் 68 நாட்களுக்கு பிறகு இன்று சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சலூன் கடை
சலூன் கடை
Published on

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளை தவிர பிற பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இன்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் கடைகள் முன்பு திரண்டனர். முக கவசம், கையுறை அணிந்து ஊழியர்கள் முடி திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com