சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி-தமிழக அரசு

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் கடந்த 19ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், முடிதிருத்துவோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவேர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமிழக அரசு மே 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்பவே சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com