நமது அணி எப்போது, எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்பி ஆதரவளிப்போம் - சச்சின் டெண்டுல்கர்

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு விடுத்த உருக்கமான கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆதரவளித்துள்ளார். #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup
நமது அணி எப்போது, எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்பி ஆதரவளிப்போம் - சச்சின் டெண்டுல்கர்
Published on

மும்பை:

இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள ரசிகர்கள் வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை. மற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல சாதனைகள் புரிந்துள்ள போதிலும் அவர்கள் வெகுவாக கவனிக்கப்படுவதோ, ஆதரவளிக்கப்படுவதோ இல்லை.

பிபா தரவரிசையில் தற்போது 97-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 97-வது இடம்தான என சாதாரமாக கடந்து செல்ல வேண்டாம். 130-வது இடத்தில் இருந்து இந்தியா 100-க்குள் வந்துள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரியின் தலைமையில் இந்த முன்னேற்றம் சாத்தியமானது.

தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.

ஆனால் அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே. இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். மேலும் மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை எனவும் அவர் கூறினார்.

சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்தார். இதுகுறித்து கோலியும் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் தயவு செய்து இந்திய கால்பந்து அணி கேப்டனின் வீடியோவை பார்த்து எதாவது செய்யுங்கள் என கூறியிருந்தார்,

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் சுனில் செத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சச்சினும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் பதிவு செய்திருந்ததாவது, நமது அணி எப்போது, எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்பி ஆதரவளிப்போம், என அவர் கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணி நாளை நடைபெறும் போட்டியில் கென்யாவை எதிர்கொள்கிறது. சச்சின் மற்றும் கோலியின் இந்த பதிவுகளால் நாளை இந்திய அணி விளையாடும் போட்டிக்கு ஆதரவு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த போட்டி சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com