கொரோனாவுக்கு எதிராக போரிட சார்க் நாடுகளுக்கு பலமான செயல்திட்டம் தேவை - பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமைக்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.

உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருக்கும் தெற்காசியா கண்டம் நமது மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக செய்தற்கரிய காரியங்களை செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகளின் தலைமைக்கு நான் முன்மொழிகிறேன். நமது குடிமக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக நாம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தலாம்.

நாம் ஒன்றிணைவதன் மூலம் இந்த உலகத்துக்கு முன்னுதாரணமாக விளங்குவதுடன் ஆரோக்கியமான பூமிக்கான பங்களிப்பையும் வழங்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com