

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்றுத்தந்த முதல் கேப்டன் என்ற மகத்தான சாதனையை மும்பை கேப்டன் ரோகித் சர்மா படைத்தார். இந்த ஆட்டத்தை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவும், பரபரப்போடு கண்டுகளித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பாக காயத்தால் அவதிப்பட்ட ரோகித் சர்மா அதில் இருந்து மீண்டு சாதித்து இருக்கிறார்.