ராமநாதபுரம் அருகே மது விற்ற 7 பேர் கைது

ராமநாதபுரம் அருகே மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 92 மதுபாட்டில்களையும், ரூ.710-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com