

புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக மேலிட நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த பதவியை ஏற்ற பின்னர் பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி வரும் 7-ம் தேதி பஹ்ரைன் நாட்டுக்கு செல்கிறார். அங்கு வாழும் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் வரும் 8-ம் தேதி பங்கேற்கவுள்ளதாகவும், அன்றிரவு அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. #tamilnews #rahulgandhi