அடுத்தவர் தோளில் ஏறி அரசியல் செய்பவர் ராகுல் காந்தி: பாஜக கடும் தாக்கு

ராகுல்காந்தி முசாபர்நகரில் நடந்த விவசாயிகள் மாநாடு பற்றி குறிப்பிடுவதற்காக, பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தையும், பொய்யையும் பரப்பி வருகிறார்.
ராகுல் காந்தி, சம்பிட் பத்ரா
ராகுல் காந்தி, சம்பிட் பத்ரா
Published on

புதுடெல்லி :

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லை. கள பிரச்சினைகளை எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. அதனால்தான், அதன் இடைக்கால தலைவரான சோனியாகாந்தி, மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ராகுல்காந்தியோ, முசாபர்நகரில் நடந்த விவசாயிகள் மாநாடு பற்றி குறிப்பிடுவதற்காக, பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தையும், பொய்யையும் பரப்பி வருகிறார்.

‘குக்கூ’ என்ற பறவை, சொந்தமாக கூடு கட்டாது. மற்ற பறவைகளின் கூடுகளை பயன்படுத்திக்கொள்ளும். ராகுல்காந்தியும் அப்படித்தான் செயல்படுகிறார்.

அவர் தனது சொந்த கட்சிக்காக வேலை செய்வது இல்லை. களத்தில் இறங்கி கடுமையாக பாடுபடுவது இல்லை. தனது அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவர்களின் தோள்களில் ஏறி சவாரி செய்து வருகிறார். அதனால் அவர் ‘இந்திய அரசியலின் அரசியல் குக்கூ’ என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com