

2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா(வயது 22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
“ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய கனவை இன்று நினைவாக்கி உள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அவர் தேர்வு செய்யும் பதவியில் மிகப்பெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.