புல்வாமா என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை - ராணுவ வீரர், போலீஸ்காரர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற்று வரும் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ராணுவ வீரர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். #Pulwamaencounter
புல்வாமா என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை - ராணுவ வீரர், போலீஸ்காரர் வீர மரணம்
Published on

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே உள்ள காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த லாம் கிராமத்தை ராணுவம் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.  இந்த சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் மற்றும் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். தொடர்ந்து சண்டை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com