புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு பிரமாண்ட முகப்பு அமைக்கும் பணி

இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு பிரமாண்ட முகப்பு அமைக்கும் பணி
Published on

புதுச்சேரி:

மத்திய அரசின் அம்ரித் பாரத் நிலையம் என்ற திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வே சார்பில் புதுவை ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ரெயில் நிலையத்தில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், ரெயில் பைலட் ஓய்வறைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

புதுச்சேரி ரெயில் நிலையத்தின் முகப்பு இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் பிரம்மாண்டமாக முகப்பு கட்டப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு அறை, நடை மேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர்கள், உணவகம், வணிக வளாகம், பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com