மனநல காப்பகத்தில் பெண் திடீர் சாவு

கடலூர் மாவட்டம் பனங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா.தமிழக பகுதியான பெரம்பையில் உள்ள தனியார் மனநல காப்ப கத்தில் அனுமதித்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:-

கடலூர் மாவட்டம் பனங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா. மனநலம் பாதிக்கப்பட்ட சகுந்தலாவை புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரம்பையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதித்தனர்.

அங்கு தங்கியிருந்த சகுந்தலாவுக்கு திடீரென நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து காப்பகம் சார்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சகுந்தலா ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சகுந்தலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சகுந்தலாவின் கணவர் ராமமூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com