ஒருநாள் கூலி ரூ.600 ஆக அதிகரிக்க வேண்டும்

விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை விவசாய தொழிலாளர் சங்க பேரவைக்கூட்டம் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்தது.

மகேஷ்வரி தலைமை வகித்தார். சுதா, ரெஜினா முன்னிலை வகித்தனர். வேலை அறிக்கையை பழனிவேல் தாக்கல் செய்தார். விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில துணை செயலளார் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் விஜயபாலன், பாகூர் தொகுதி நாராயணன், தொகுதிக்குழு உறுப்பினர் கங்காதரன், அகில இந்திய தலித் உரிமை இயக்கம் ஓம்பிரகாஷ் மற்றும் கிராம சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஊரக வேலை திட்டத்தை ஆண்டு முழுவதும் வழங்கி நாட்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தி உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும். 100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். பனையடிகுப்பம் கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com