வாகன பிரச்சாரம் கருத்தரங்கம்-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்

குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது. சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.
நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்த காட்சி. இதில் சங்கத் தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்த காட்சி. இதில் சங்கத் தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Published on

புதுச்சேரி:

ஊசுடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் தினத்தையொட்டி வாகன பிரச்சாரம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை குடிமை பொருள் வழங்கல் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நல சங்கம் இணைந்து நடத்தியது.

நிகழ்ச்சியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் புதுவை அரசு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நுகர்வோர் கையேடு, சிறந்த சுய உதவி குழு பெண்களுக்கு நினைவு பரிசு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப துணிப்பையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சங்கத் தலைவர் நாராயணன் , சங்கத் துணைத் தலைவர் பாரதி ஆகியோர் செய்திருந்தார்.

இதில் ராஜீவ் காந்தி நுகர்வோர் குறைதீர்க்கும் நலசங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com