பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

மார்க்சிஸ்டு வலியுறுத்தல்இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை பல்கலைக் கழகத்தில் போலி ரசீது மூலம் ரூ.பல கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். பல்வேறு ஊழலில் ஈடுபட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஜனாதிபதி உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com