தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழாவில் விருது வழங்கப்பட்ட காட்சி.
தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழாவில் விருது வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் விழா, மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தமிழ் சங்க விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு, துணை செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனு, மோகன்தாசு வரவேற்றார். 'கவிஞரேறு வாணிதாசரின் பன்முக பங்கு' என்ற தலைப்பில் கவியரங்கமும், 'கெஞ்சி வாழ்தல் நஞ்சினும் கொடியது' என்ற தலைப்பில் உரையரங்கமும் நடந்தது. தொடர்ந்து மங்கலம் அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பலருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.

விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், கவிஞர் வாணிதாசனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com