வீடு புகுந்து வாலிபர்களை தாக்கிய கும்பல்

கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சரோஜ், நிதிராம், மற்றும் சவுமியரஞ்சன்,ஆகிய 3 பேரும் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பாலமுருகனிடம் கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள். இதற்காக அங்கு ஒரு கீற்று கொட்டகையில் தங்கியிருந்து வந்தனர். வேலை முடிந்ததும் இரவு சாப்பிட்டு விட்டு கீற்று கொட்டகையில் 3 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கர்ச்சிப் கட்டிக் கொண்டு வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.

இதையடுத்து சரோஜ் உள்பட 3 பேரும் எழுந்து கதவை திறந்த போது திடீரென அந்த கும்பல் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்காமல் 3 பேரும் அலறினர். அப்போது அந்த கும்பல் சத்தம் போட்டால் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து சரோஜ் இதுபற்றி தாங்கள் வேலை பார்க்கும் என்ஜினீயர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதுகுறித்து சரோஜ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வடமாநில வாலிபர்களை தாக்கிய கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com