கோவில் துப்புரவு பணியாளர் மின்சாரம் தாக்கி சாவு

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 57). லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தூய்மை பணியா ளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் தூங்க சென்றவர் காற்றுக்காக டேபிள் பேன் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவேஅவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com