புதுவையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது- தம்பதி உயிர் தப்பினர்

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.
புதுவையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது- தம்பதி உயிர் தப்பினர்
Published on

புதுச்சேரி:

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் குணாளன். இவர் தனது மனைவியுடன் சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவரது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு புதுவைக்கு வந்தார்.

புதுவையில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள கப்ஸ் தேவாலயம் அருகில் காரை நிறுத்தி இறங்கினர். அப்போது காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த காரின் உட்புறம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டபோது குணாளனும் அவரது மனைவியும் காரை விட்டு இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com