மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி-ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்தார்

மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடைபெற்றது.சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
மோட்டார் சைக்கிள் பேரணியை ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்த காட்சி.
மோட்டார் சைக்கிள் பேரணியை ஐ.ஜி. சந்திரன் தொடங்கி வைத்த காட்சி.
Published on

 புதுச்சேரி:

உலக அமைதியை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி தொடக்க விழா கடற்கரை சாலையில் நடந்தது.

காஞ்சி மாமுனிவர் கல்லூரி மாணவி ஷகிலா வரவேற்றார். ஹோப் நிறுவன இயக்குனர் ஜோசப் விக்டர் ராஜ் தொடக்கவுரையாற்றினார். ஐ.ஜி.சந்திரன் கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ரைஸ் நிறுவன கன கராஜ், ரோச் விக்டர், பால கிருஷ்ணன், சத்தியபாமா, திருமால், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாயக் கல்லூரி மாணவர் சபரி தலைமை யில் புதுவையில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, மற்றும் சமுதாயக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி செல்லும் வழியில் உள்ள பொதுமக்க ளுக்கு உலக அமைதி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது பேரணி, கடற்கரை காந்தி சாலையில் தொடங்கி, புதிய பஸ் நிலையம், மூலக்குளம் வழியாக வில்லியனூர் துணை தாசில்தார் அலுவலகம் முன்பு அமைந் துள்ள அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com