தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

பொதுமக்கள் அவதிகழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.
பிள்ளையார்குப்பம்  தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.
பிள்ளையார்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.
Published on

புதுச்சேரி:

கடலூர்-புதுவை சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமாக பரபரப்பாக காணப்படும்.

இந்த ரோட்டிற்கு புதிய சாலைகள் போடப்பட்டு சாலை ஓரத்தில் உள்ள கழிவு நீர் வடிதல் வாய்க்கால்களை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுபோல பிள்ளையார் குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை தடுப்பு சுவர் அமைப்பதற்காக பணி கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.

இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.

மேலும் கழிவுநீர் அதிகரித்து வருவதால் வாய்க்கால்கால் நிரம்பி ரோட்டிலே தேங்கி நிற்கிறது.

இதனால் கடலூர்- புதுவை செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் ஊர்ந்து செல்கின்றது. மேலும் அவ் வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பிள்ளையார் குப்பம் மாஞ்சாளை ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com