எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உபகரணம்

புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி ஆசிரியர் அண்ணாமலை, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் 35 மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்கான எழுது பொருள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com