மாநில கைப்பந்து போட்டியில் ஸ்பைடர் அணி வெற்றி

காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கைப்பந்து போட்டி அரியாங்குப்பம் ஏ.பி.ஆர். விளையாட்டு கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

3 நாட்கள் நடந்த இப்போட்டியில் புதுவை மாநில முன்னணி கைப்பந்து அணிகள் விளையாடின. இதில் காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர். 3 போட்டிகளில் முதல் ஆட்டம் ஸ்பைடர் 25-23, 2-வது ஆட்டம் பாரதிதாசன் 25-21, 3-வது ஆட்டம் ஸ்பைடர் 25-19 என்ற புள்ளிகள் பெற்றது. பாரதிதாசன் அணி ஒரு புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், ஸ்பைடர் அணி 2 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சுழற்கோப்பை, பரிசு பொருட்களை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில பொறுப்பாளர் கீதநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com