மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம்

கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்த காட்சி.
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் மேலாண்மைத்துறை மாணவர் சங்கம் சார்பில் 'மிடிலைட் 22' கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் கருத்தரங்க உரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை லுகாஸ் டி.வி.எஸ். நிறுவன மூத்த அதிகாரி தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும். தொடர்ச்சியான கற்றல், புதுப்பித்து கொள்ளும் தன்மை, பணிக்கு தேவையான திறன்கள் மற்றும் நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டிய தன்மைகளை வளர்த்து கொள்ள வேண்டும்' என்றார். கருத்தரங்கில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் அகல்யா கருத்தரங்கு நிறைவு அறிக்கை வாசித்தார். முடிவில் பேராசிரியர் அருண் நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர் மன்சூர் இப்ராஹிம் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com