என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    Puducherry | என்.ஆர். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு நிறைவு: பாஜக 14 இடங்களில் போட்டி
    X

    Puducherry | என்.ஆர். காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு நிறைவு: பாஜக 14 இடங்களில் போட்டி

    • ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடுகிறது.
    • கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக தற்போது 14 இடங்களில் போட்டி.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது.

    ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக பாஜக-வின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

    அதன்படி என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2021-ல் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    Next Story
    ×