பாகூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

பாகூர் அரசு நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது. இதனை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வை யிட்டனர்.

முன்னதாக மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியர் வசந்த ராஜா, ஆசிரியர்கள் தம்பி ராஜலட்சுமி, கார்த்திகேயன், மஞ்சு, ரம்யா, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com