ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதி

மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.மீனவர் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலை பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
சாலை பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
Published on

 புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு மீனவர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ்குமார் ஏற்பாட்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.

அதன்படி ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள், சோலை நகர் வடக்கு மீனவர் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com