ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை வசதிகள்

செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ரூ.36  லட்சம் மதிப்பில் சாலை வசதிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை வசதிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம்மதிப்பீட்டில் பாகூர் கிழக்கு வீதி சந்திப்பு தெய்வ சகுந்தலா நகரில் தார் சாலையும் மற்றும் பங்களா வீதி சந்திப்பு அன்னை நகரில் ரூ. 24 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க. கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com