ரங்கசாமி ராஜினாமா ஏற்பு: தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிப்பு

தேர்தல் கமிஷன் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை அறிவிக்கும்.
ரங்கசாமி ராஜினாமா ஏற்பு: தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிப்பு
Published on

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக, லஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டியிட்டது. இதில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டார். இதில் 2 தொகுதியிலும் ரங்கசாமி வெற்றி பெற்றார்.

14 நாட்களில் ஏதேனும் ஒரு தொகுதியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்ட விதி. இதன்படி கடந்த 17-ந்தேதி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சட்டசபை செயலர் தயாளனிடம் ரங்கசாமி வழங்கினார்.

ரங்கசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக புதுவை சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் கமிஷன் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை அறிவிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com