அதிகாரிகளுடன் ரங்கசாமி டெல்லி சென்று அனுமதி பெற வேண்டும்-வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு எந்த திட்டமிடலும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காலத்தோடு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் புதுவை மாநில மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு பள்ளி மாணவ ர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் உண்மையாக இருந்தால், சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர், அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்து சென்று அனுமதி பெற வேண்டும்.மாணவர்களின் எதிர்கால த்தோடு விளையாட கூடாது. இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com