

புதுவையில் கோடை காலமான மார்ச், ஏப்ரலில் கடுமையான வெயில் அடித்தது.
பகல் நேரங்களில் தகித்த வெப்பத்தால் புதுவை மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இந்த வெயில் இந்த மாதத்திலும் தொடர்ந்தது.
கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் மழை பெய்தது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அதிகாலையில் மீண்டும் மழை பெய்தது. வானமும் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. ஆனால் பகல் நேரத்தில் மீண்டும் வெயில் அடித்தது. தொடர்ந்து அதிகளவில் வெயில் பதிவாகி வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் லேசான மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து வருகிறது. காலை முதல் வானம் இருண்டு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இடி, மின்னல் தொடர்கிறது.
ஆனால் பெரியளவில் மழை இல்லை. வானம் இருண்டு கிடப்பதால் காலை நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.