சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார்: புதுச்சேரி சபாநாயகர் திட்டவட்டம்

எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றார்.சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார்: புதுச்சேரி சபாநாயகர் திட்டவட்டம்
Published on

புதுச்சேரி:

சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாக சந்திர பிரியங்கா செயல்பட எந்த தடையும் இல்லை.

பதவி நீக்க கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.

 சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com