

புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புஸ்சி வீதிக்கு வடக்கு, முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், குபேர் சாலை, டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோநகர், காமராஜர் சாலை, சாரம்,
ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.