புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு- குழந்தைகளை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து புதுவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை அடைய ஒத்துழைக்க வேண்டும்.
புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு- குழந்தைகளை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுபதிவு நடைபெறுகிறது.

புதுச்சேரி ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கையுடன் வாக்காளர்கள் வரவேண்டும். ஓட்டுச்சாவடிகளில் குடிநீர் வசதி உள்ளது. ஈர துண்டுகளை வாக்காளர்கள் எடுத்து வர அறிவுறுத்தப்படுகின்றனர். இது உடல் வெப்பத்தை தணிக்க உதவும். குழந்தைகளை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரவேண்டாம்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்தள வசதி, சக்கர நாற்காலி, கர்ப்பிணிகளுக்கு நேரடி முன்னுரிமை, வயதானவர்களை அழைத்து வர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து புதுவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை அடைய ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com