

புதுச்சேரி கடற்கரை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்கின்றனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் டிஐஜியும் நடைபயிற்சி செய்து வந்தார். இதனால் கடற்கரை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். கடற்கரை சாலையில் படுத்து தூங்குவோர் அசுத்தம் செய்வோர் அகற்றப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டிஐஜி நடைபயிற்சிக்கு வரவில்லை. இதனால் கடற்கரை சாலையில் போலீசார் ரோந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடற்கரையில் காற்று வாங்கியபடி பலர் தூங்குகின்றனர். சிலர் அசுத்தமும் செய்கின்றனர். இதனால் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் வேதனை அடைந்துள்ளனர்.
இதனை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்து தொடர வேண்டும் என நடைபயிற்சி செல்வோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.