புதுவை லாஸ்பேட்டையில் வாலிபர் வெட்டி கொலை- போலீசார் தீவிர விசாரணை

தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புதுவை லாஸ்பேட்டையில் வாலிபர் வெட்டி கொலை- போலீசார் தீவிர விசாரணை
Published on

புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜன் என்ற பவல்ராஜ் (வயதோ 26).

இவர் நேற்று நள்ளிரவு லாஸ்பேட்டை உழவர்சந்தை பூங்கா அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களுடன் அவரை வழிமறித்தது.

இதனால் அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓட விடாமல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அதே லாஸ்பேட்டை நெருப்புகுழி பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் மகன் சுள்ளான் என்ற பழனி முருகன், கிருஷ்ணமூர்த்தி மகன் சிவா, பெருமாள் மகன் கமலேஷ் ஆகியோருக்கும், பவல்ராஜ்க்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

சில நாட்கள் முன்பு பவல்ராஜ் 3 பேரின் இருப்பிடத்திற்கே சென்று அடித்து, உதைத்து அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது தனது காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க செய்துள்ளார்.

இதை தனது ஆதரவாளர்களிடம் கூறி காலில் விழுந்ததால் உயிர் பிச்சை அளித்ததாக கூறியுள்ளார். இது 3 பேருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பவல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் தனியாக வந்த பவல்ராஜை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com