எம்.ஐ.டி.கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தந்த அந்நிறுவன மேலாளர்கள் இந்துமதி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் அருண் ஆகியோர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 2023-ம் ஆண்டு, இளங்கலை மற்றும் மேலாண்மை துறை பயிலும் மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரிஜெயக்குமார் செய்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com