மீனவர்களுக்கு ஓய்வூதியம்

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ மீனவர்களுக்கு ஓய்வூதியம்  வழங்கிய காட்சி.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ மீனவர்களுக்கு ஓய்வூதியம்  வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலம் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் தொகை பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வழங்கினார்.

பயனாளிகளுக்கு ஓய்வூதியம் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதனையும் அவர் தெரிவித்தார். ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் முரளி மற்றும் ராகேஷ், செங்குட்டு, மணிமாறன், கோபி, புண்ணியகோடி, ஜீவா, தினேஷ், செல்லப்பன், ஜெயசீலன், மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com