தமிழகம், மேற்கு வங்க தேர்தலில் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்- தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்களிக்கும் உரிமை உள்ள ஊழியர்கள், வாக்களிக்க செல்ல தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
தமிழகம், மேற்கு வங்க தேர்தலில் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்- தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
Published on

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் நாளை (23ந்தேதி) நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் வரும் 23, 29-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்களிக்கும் உரிமை உள்ள ஊழியர்கள், வாக்களிக்க செல்ல தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

இந்த விதி கட்டாயமானது. அரசு துறை, தனியார் நிறுவனங்கள், கடைகள், வர்த்தகம், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து வகை நிறுவனங்களுக்கும் இந்த சட்ட விதி பொருந்தும். இந்த விடுமுறைக்காக சம்பளத்தில் குறைப்பு செய்யக்கூடாது.

இந்த விதி மீறும் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே புதுவை மாநிலத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு, மேற்கு வங்க வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் தொகுதிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அறிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். கல்வி நிறுவவனங்களும் இந்த சட்டவிதியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com