பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்

வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்பா.ஜனதா கூட்டணி முறிவை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது புதுவை மாநில அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும்.அண்ணாமலை தனது சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதுவையில் அ.தி.மு.க. தொண்டர்களின் அயராத உழைப்பால் என்ஆர்.காங்கிரஸ், பாரதீயஜனதா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. அ.தி.மு.க.வின் முதுகில் குத்தியவர்கள் யார்? என்பது புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும்.

அ.தி.மு.க.வின் தயவு தேவையில்லை என்றால் ஆட்சியை கலைத்து விட்டு என்ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி அரசு தேர்தலை சந்திக்கட்டும். பா.ஜனதா கூட்டணி முறிவை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறுஉருவமாக திகழும் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்க வேண்டும். இனி எந்த காலத்திலும் பா. ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கும் நன்னாளை அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com