

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை முதலே ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது.
என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி, தான் போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.