மணக்குள விநாயகர் கல்லூரியில்தேசிய அறிவியல் திட்ட போட்டி

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நல பிரிவு அதிகாரி தமிழ்ச்செல்வி பரிசு வழங்கினார். அருகில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்புமலர் உள்ளார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நல பிரிவு அதிகாரி தமிழ்ச்செல்வி பரிசு வழங்கினார். அருகில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்புமலர் உள்ளார்.
Published on

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.

பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 57 குழுக்களை சேர்ந்து 295 மாணவர்கள் தங்களின் அறிவியல் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினர்.

அவற்றில் சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்பு மலர் வரவேற்றார்.

புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நலப்பிரிவு அதிகாரி தமிழ்செல்வி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை யாற்றினார். கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் அகாடமிக் டீன் அறிவழகர் கலந்து கொண்டனர்.வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com