பாலஸ்தீன போரை நிறுத்த கோரி மார்க்சிஸ்டு ஊர்வலம் - ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
பாலஸ்தீன போரை நிறுத்த கோரி மார்க்சிஸ்டு ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
பாலஸ்தீன போரை நிறுத்த கோரி மார்க்சிஸ்டு ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர் மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com