லிப்ட் ஆப்ரேட்டர் தூக்கு போட்டு தற்கொலை

புதுவை அருகே வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் லிப்ட் ஆப்ரேட்டர். இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் (வயது47). லிப்ட் ஆப்ரேட்டர். இவரது மனைவி குணவதி (வயது38). விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு மீனாட்சி சுந்தரம்(வயது16), ஆதித்யா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

குருபாதத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். குணவதி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் குணவதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே குருபாதம் இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி குணவதி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com