மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.
மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி:

மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com