வி.சி.க சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

பொதுமக்களுக்கு மோர் வழங்கி தொடங்கிவைத்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
சேதராப்பட்டில் ஊசுடு தொகுதி வி.சி.க பொருளாளர் முருகையன் முன்னிலையில் பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்ட காட்சி.
சேதராப்பட்டில் ஊசுடு தொகுதி வி.சி.க பொருளாளர் முருகையன் முன்னிலையில் பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

சேதராப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது.ஊசுடு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேதராப்பட்டு முகாம் சார்பில் சேதராப்பட்டு- மயிலம் சாலையில் நீர் ,மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதில் லட்சுமி பிளாஸ்டிக் கம்பெனியின் உரிமையாளர் குணசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் சே.கா.முருகையன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஊசுடு தொகுதி அமைப்பாளர் வில்லாளன் என்கிற விஜயன், வி.சி.க நிர்வாகிகள் கருணாகரன், தவமணி, வழக்கறிஞர் முனுசாமி, உதயகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com