மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட படிப்பு தொடக்கவிழா

புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது.மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்த காட்சி.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் எம்.எஸ்.சி., செவிலிய படிப்பிற்கான முதலா மாண்டு வகுப்புகள் தொடக்கவிழா மற்றும் புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் டாக்டர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் டாக்டர். காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகடாமிக் டாக்டர். கார்த்திகேயன், டீன் கலைச்செல்வன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். முத்தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் துணை பேராசிரியர் நித்யா நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com