பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை

கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கை போன்றவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி யின் போது தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், விநாயக மூர்த்தி, செல்வம், சேட்டு, நிசார், ரகுமான், பஸ்கல், மற்றும் கடசியின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com