காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காந்தி சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி.
காந்தி சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் அவைத்தலை வர் அரி கிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, மூத்த நிர்வாகி ரகுபதி, அணி செயலாளர்கள் தொழிற்சங்கம் சுரேஷ், நந்தகோபால், கலைவாணி, இளம்வழுதி, புஷ்பா, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல். தனவேலு, செல்ல என்ற தமிழ்செல்வன், ராமச்சந்திரன், முருகன், பரிதிமாற்கலைஞன், கலிய மூர்த்தி மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகி கள் லூர்து சாமி, சக்திவேல், சண்முகம், முத்துபாண்டி, கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com