போலீசாருக்கு இலவச மருத்துவ காப்பீடு-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை

ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும்.போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும். காவலர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

காவல்துறை உயரதி காரிகள் வசதியானர்கள், வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.

புதிய கல்விக்கொள்கை யை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர் பஸ் தரமில்லாமல் உள்ளது. பி.ஆர்.டி.சி. மூலமாக இ-பஸ் வாங்கி இயக்க வேண்டும்.

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சிக்குழுவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. கள் உறுப்பினர்களாக இல்லை. புதுவைக்கு வரும் வெளிமாநில அதிகாரிகளும் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

தண்டனை காலம் முடித்து சிறையில் இருக்கும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சிறை காவலர்களுக்கு பதவி உயர்வும், இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு கல்யாண சுந்தரம் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com